சரோஜாதேவியை கவர்ச்சியால் வீழ்த்திய ஜெயலலிதா!! ஒரே இரவில் சாய்ந்த நடிகையர் திலகம் கேரியர்
சரோஜாதேவி
தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம் ஜி ஆருடன் ஜோடியாக நடித்து அசைக்க முடியாத ஹீரோயினாக இருந்தவர் தான் நடிகை சரோஜாதேவி. அப்படி இருந்த அவரின் அந்த அஸ்தமனத்திற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் வருகை மற்றும் ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான கவர்ச்சி அலை தான்.

அவர்தான், சரோஜாதேவி என்ற முத்த நடிகையின் திரைவாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று மூத்த சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா
அவர் அளித்த பேட்டியொன்றில், எம்ஜிஆர் - சரோஜாதேவி இணைந்து நடித்த படங்களும் பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் பரவியது. எம்ஜிஆருடன் பணத்தோட்டம், பாசம், கொடுத்து வைத்தவள், பெரிய இடத்துப் பெண் போன்ற வெற்றிப்படங்களுக்கு பின் சரோஜாதேவி நடித்தாலும் பெரிய நடிபு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
ஆனாலும் பாலும் பழமும் படத்தில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பை வழங்கினார். அதன்பின் எம்ஜிஆர் படங்களில் ஜெயலலிதா அதிகமாக நடிக்க ஆரம்பித்தார்.

சிவாஜியுடன் தேவிகாவு, ஜெமினி கணேசனுடன் சாவித்ரியும் நடித்து வந்ததால் சரோஜாதேவிக்கு வாய்ப்புகள் குறைந்தன. கே ஆர் விஜயா திரைத்துறையில் நுழையும் சமயத்தில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடிக்க தொடங்கிய நிலையில் சரோஜாதேவியின் மார்க்கெட் சரிய தொடங்கியது.
அதுமட்டுமின்றி, பறக்கும் பாவை படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டதும், திரையுலகில் சரோஜாதேவியின் இடத்தை பலவீனப்படுத்தியது. ஜெயலலிதா பொறுத்தவரை, எங்கிருந்தோ வந்தாள் படத்தில் ஓரளவிற்கு நடித்திருந்தாலும், முத்துச்சிப்பி படத்தில் பிரம்மாதமாக நடித்திருந்தார்.

குமரிப்பெண் படத்தில் ஜின் ஜினாக்கடி பாடலுக்கும், சொன்னால் என்ன வந்தால் என்ன என்ற பாட்டில் ஜீன்ஸ் அனிந்து ஆடிய பாட்டுக்கு பின் கவர்ச்சி நடிகையாகவே மாறிப்போனார் ஜெயலலிதா. இதனையடுத்து ஜெயலலிதாவின் கிளாமர் ரூட்டில் மஞ்சுளா, லதா போன்ற நடிகைகள் சென்றதாலும் சரோஜாதேவியின் மார்க்கெட் குறைய ஆரம்பித்து அப்படியே பழகிவிட்டது என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.