நடிகை சிம்ரன் எனக்கு இப்படிப்பட்டவர் தான்!! நடிகர் அப்பாஸ் கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் ஜாக்லேட் பாயாகவும் மல்ட்டி ஸ்டார் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை அப்பாஸ். பல படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சில காரணங்களால் குடும்பத்துடன் நியூசிலாந்து நாட்டிற்கு சென்று செட்டிலாகிவிட்டார்.
அதன்பின் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலைமைக்கு வந்த அப்பாஸ் மீண்டும் இந்தியா பக்கம் வந்துள்ளார். மீண்டும் நடிக்க ஆரம்பிக்கவுள்ளேன் என்று கூறி பேட்டியும் கொடுத்து வருகிறார் அப்பாஸ்.
சினிமாவில் ஆரம்பித்த சில காலத்தில் நடிகை சிம்ரனுடன் பூச்சூடவா படத்தில் நடித்திருந்தார். அப்போது இருவரின் கெமிஸ்ட்ரியும் சூப்பராக ஒர்க்கவுட் ஆனது. ஒரு கட்டத்தில் சிம்ரனும் அப்பாஸும் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் தன்னுடைய கேரியருக்காக சிம்ரனிடம் இருந்து அப்பாஸ் விலகிவிட்டார் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சிம்ரன் குறித்து சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அப்பாஸ், சிம்ரன் எனக்கு நல்ல நண்பர், ஸ்கிரீனில் நல்ல ஜோடியாக தெரிந்தோம். அதிக படம் பண்ணவில்லை. சிம்ரனுடன் தமிழில் ரெண்டு படம் தெலுங்கில் ஒரு படம் பண்ணேன். நல்ல கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடிக்கும், இப்ப கூட நான் அவரிடம் பேசி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.