முதுகில் குத்திய நடிகரால் விரக்தியில் வெளிநாட்டுக்கு ஓடிய அப்பாஸ்!! உண்மையை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் அப்பாஸ். அதன்பின் சில தோல்வி படங்களை கொடுத்து மார்க்கெட்டை இழந்த அப்பாஸ், படையப்பா, பஞ்சதந்திரம், மின்னலே, ஆனந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
அப்படி அண்ணன், தம்பி, வெளிநாட்டு மாப்பிள்ளை போன்ற ரோலில் நடித்து வந்த அப்பாஸ் திடீரென காணாமல் போய்விட்டார். வெளிநாட்டுக்கு சென்று அங்கு செட்டிலாகிவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அப்பாஸ் இங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்ல என்ன காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஒரு பிரபல நடிகர் செய்த துரோகத்தால் தான் அப்பாஸ் விரக்தியில் காணாமல் போய்விட்டார். நியூசிலாந்துக்கு போனது முதல் வேலையே பெட்ரோல் பங்கில் வேலை பார்த்திருக்கிறார். இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டது.
சிறு ரோலில் நடிக்கலாம் என்று நடித்து வந்த அப்பாஸ், எஸ்பி பாலசுப்ரமணியம் கொடுத்த அட்வைஸ்-ஆல் ஒரு ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை துவங்கியிருக்கிறார்.
அதன்பின் பல நிகழ்ச்சிகளை நடத்திய அப்பாஸ் எஸ்பிபி-யின் நிகழ்ச்சிகளையும் நடத்திருக்கிறார். அப்படி ஒரு சமயத்தில் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா இடையே பிரச்சனைகள் இருர்ந்தது. அப்போது இரு மாநிலத்திற்கும் இடையே உறவுகள் சுமுகமாக இல்லை.
அப்போது அப்பாஸ் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவெடுத்து கர்நாடகாவில் இருக்கும் முன்னணி நடிகர்களை சந்தித்து சமாதானமாக பேசியிருக்கீறார். போட்டி நடத்த நடிகர்களை ஒப்புக்கொள்ள வைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் ஒருவர் அபாண்டமாக அப்பாஸ் மீது பழி சுமர்த்தி ஓரங்கட்டியதோடு எல்லா பொறுப்புகளையும் வெவ்வேறு மாநில நடிகர்களை ஒன்றிணைத்து அவரே எல்லா பெருமையையும் தட்டிச்சென்றுள்ளார். இதனால் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்த அப்பாஸ் நியூசிலாந்து நாட்டிற்கு சென்று குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.