விஷாலுடன் திருமணம் வதந்தி..பாய் ஃபிரெண்ட் உடன் ரிலேஷன்ஷிப்!! நடிகை அபிநயா பதிலடி..

Vishal Marriage Tamil Actress Actress Mark Antony
By Edward Jan 29, 2025 09:30 AM GMT
Report

அபிநயா பாய் ஃபிரெண்ட்

நாடோடிகள், மார்க் ஆண்டனி, பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அபிநயா. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து பல மொழிகளில் நடித்த நடிகை என்ற சாதனையும் அபிநயா பெற்றுள்ளார்.

இந்நிலையில், விஷாலுடன் நடித்த போது அவருடன் காதல் என்றும் திருமணம் செய்யப்போகிறார்கள் என்றும் செய்திகள் பரவி வருவது குறித்து அபிநயா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 33 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்தும் சிங்கிளா? மிங்கிளா? என்ற கேள்விக்கு பதிலளித்ததுள்ளார்.

விஷாலுடன் திருமணம் வதந்தி..பாய் ஃபிரெண்ட் உடன் ரிலேஷன்ஷிப்!! நடிகை அபிநயா பதிலடி.. | Abhinaya Give A Slipper Shot Those Spread Rumors

நான் இப்போது ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறேன். என்னுடைய சின்ன வயது நண்பர் தான் என்னோட பாய் ஃபிரெண்ட். 15 ஆண்டுகளாக இந்த உறவு தொடர்கிறது. அவர் என் ஃபிரெண்ட் என்பதால் அவரிடம் எந்த விஷயமாக இருந்தாலும் பேசமுடியும்.

இன்னும் எங்களின் கல்யாணம் பற்றிய பிளான் எதுவும் பண்ணவில்லை. அதுக்கெல்லாம் ஒரு டைம் இருக்கிறது. நான் இன்னும் செய்ய வேண்டிய விஷயம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விஷாலுடன் திருமணம்

மேலும் டைரக்‌ஷனில் இருப்பவர்கள் எப்படி ஒரு வாய் பேச முடியாத பொண்ணால இதெல்லாம் பண்ண முடியும் என்று என்னை ரொம்பவே அசிங்கப்படுத்துவார்கள். ஆனால் எல்லாருக்கும் திறமை இருக்கிறது. இப்படி அசிங்கபடுத்துபவர்கள் முன்னாடி எல்லாத்தையும் செய்துக்காட்டி நிரூபிக்கவேண்டும் என்று நான் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

விஷாலுடன் திருமணம் வதந்தி..பாய் ஃபிரெண்ட் உடன் ரிலேஷன்ஷிப்!! நடிகை அபிநயா பதிலடி.. | Abhinaya Give A Slipper Shot Those Spread Rumors

நடிகர் விஷால் ரொம்ப தங்கமான மனிதர், அவர் ரொம்ப பாசிட்டிவ்வான ஆள். என்னிடம் சைன் லேங்குவேஜ் எல்லாம் கத்துக்கொடுக்க சொல்லுவார். நாங்க எல்லாம் ஒன்றாக தான் உக்கார்ந்து சாப்பிடுவோம்.

எங்களை சுற்றி வரும் வதந்தி எல்லாம் ரொம்ப முட்டாள்தனமானது, விஷால் எனக்கு பிரபோஸ் பண்ணாரு, எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகிறது என்று வரும் செய்திகளை எல்லாம் நம்பாதீங்க.

அவர்கள் வயிற்றுப் பொழப்பிற்காக எதையாவது பேசுவார்கள், நான் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் போய்விடுவேன். என்னமோ சொல்லுங்க, நீங்கள் சந்தோஷமா இருந்தா ஓகே தான்னு நான் போய்விடுவேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.