மெத்தையில் விழும் காட்சி...என் வயிற்றில் கமல் அப்படி செய்தார்!! நடிகை அபிராமி சொன்ன ரகசியம்
நடிகை அபிராமி
குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து 1995ல் வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை அபிராமி. மலையாள படங்களில் நடித்து வந்த அபிராமி, கமல் ஹாசனின் விருமாண்டி பட வாய்ப்பு பெற்று சிறப்பான நடிப்பை காட்டி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றார்.
அப்படத்திற்கு பின் திருமணம் செய்து செட்டிலாகிய அபிராமி, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அபிராமி அளித்த பேட்டியொன்றில் விருமாண்டி படத்தில் நடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
வயிற்றில் குத்திய கமல்
அதில், விருமாண்டி படத்தின் உன்னைவிட பாடலின் இரண்டாவது சரணத்தில் நானும், கமலும் மெத்தையில் விழும்படியான ஒரு ஷாட் வரும். மெத்தையில் விரும்போது பேசும் வசனத்தில் அப்பா என்று சொல்ல வேண்டும். டப்பிங்கின் போது அதை வித்தியாசமான மாடுலேஷனில் சொல்ல டிரை செய்தேன்.
கமலும் அதைத்தான் விரும்பினார். ஆனால் எனக்கு அது வரவில்லை. இரண்டு மூன்று டேக்குகள் போயும் வரவில்லை என்பதால் உடனே அருகில் கமலோ, இன்னும் ஒரு தடவை பேசு என்று சொன்னார்.
நானும் அந்த டயலாக்கை பேசிக்கொண்டிருந்தபோது திடீரென எனது வயிற்றில் குத்திவிட்டார். நான் உடனே அப்பா என்று சொன்னேன். அப்போதுதான் நாங்கள் நினைத்தபடி அந்த அப்பா வார்த்தை வந்தது என்று அபிராமி கூறியிருக்கிறார்.