இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த டாடா!! மகளிர் கிரிக்கெட் அணிக்கு இப்படியொரு பரிசா?
மகளிர் கிரிக்கெட் அணி
பொதுவாக ஒலிம்பிக் மற்றும் ஐசிசி நடத்தும் போட்டிகள் சார்ப்பாக வெற்றி பெரும் இந்திய அணி மற்றும் வீரர்களுக்கு பரிசுகள், பட்டங்கள் கொடுப்பது உண்டு. அப்படிம் சமீபத்தில் ஐசிசி மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ஏராளமான பாராட்டுகளும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள பரிசு, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 1991ல் இருந்து 2003 ஆண்டுகளில் டாடா சியரா காரை விற்பனை செய்தது.
டாடா
சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் இந்த காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. வரும் நவம்பர் 25 ஆம் தேதி புதிய டாடா சியாரா மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த டாடா சியரா காரை ஐசிசி மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் தலா ஒவ்வொருவருக்கும் பரிசாகா அளிப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன அறிவித்துள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ. 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.