இரவில் எப்படி தூக்கம் வருது!! ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்துக்கு வதந்திக்கு பதிலடி கொடுத்த கணவர்..

Aishwarya Rai Gossip Today Indian Actress Divorce Abhishek Bachchan
By Edward Jul 06, 2025 09:30 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது காதல் கணவர் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என்றும் அபிஷேக் பச்சன் வீட்டில் ஐஸ்வர்யா இல்லை என்றும் செய்திகள் பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு அபிஷேக் பச்சன், என் கை விரலில் திருமண மோதிரம் இருக்கிறது, என்றும் விவாகரத்து என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் விளக்கமும் கொடுத்திருந்தார். தற்போது மீண்டும் ஐஸ்வர்யா ராயை பிரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இரவில் எப்படி தூக்கம் வருது!! ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்துக்கு வதந்திக்கு பதிலடி கொடுத்த கணவர்.. | Abhishek Dismisses Divorce Rumours Aishwarya Rai

அபிஷேக் பச்சன் பதிலடி

அதில், சமூகவலைத்தளங்களில் பேசப்படுவதை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டேன். என் அம்மாவும் ஐஸ்வர்யா ராயும் வெளி உலகில் நடிப்பது வீட்டிற்குள் நுழையாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

அதனால் வீட்டில் நிம்மதி இருக்கிறது. இரவில் படுத்தால் தூக்கம் வருகிறது. நான் திரையுலகை பார்த்து வளர்ந்தவன் என்பதால் எதை கண்டுகொள்ள வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சோசியல் மீடியாவின் பேச்சுக்கள் என்னை பாதிப்பது இல்லை.

புற்றுநோயால் இறந்த அப்பா..அவரிடம் உண்மையை மறைச்சிட்டேன்!! வெளிப்படையாக கூறிய மிர்ச்சி சிவா..

புற்றுநோயால் இறந்த அப்பா..அவரிடம் உண்மையை மறைச்சிட்டேன்!! வெளிப்படையாக கூறிய மிர்ச்சி சிவா..

வீட்டில் நிம்மதி இருக்க மட்டுமல்ல மகள் ஆராத்யாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதனால் தான் படங்களில் முழு கவனம் செலுத்த முடிகிறது என்று மனைவி ஐஸ்வர்யா ராயை பாராட்டி பேசியிருக்கிறார்.

இரவில் எப்படி தூக்கம் வருது!! ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்துக்கு வதந்திக்கு பதிலடி கொடுத்த கணவர்.. | Abhishek Dismisses Divorce Rumours Aishwarya Rai

ஆராத்யா

மேலும், ஆராத்யா பிறந்தப்பின் கெரியருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், என் மகளை கவனித்துள்ள ஆயா வேண்டாம் என்று சொல்லி அவரே பார்த்துக்கொண்டு வருகிறார். மகளே உலகம் என்று வாழும் ஐஸ்வர்யா ராயை பாராட்டாதவர்களே இல்லை.

ஆனால் அவர் எப்போது வெளியே வந்தாலும் ஆராத்யா கையை விடாமல் பிடித்துக்கொண்டு போவதை சமூகவலைத்தள பக்கங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

பாலிவுட்டில் நேற்று பிறந்த குழந்தைகள் எல்லாம் தனியாக நடக்கிறார்கள். ஆனால் டீனேஜராகியும் ஆராத்யா பச்சனால் தனியாக நடக்க முடியவில்லை, மகளின் கையை பிடிப்பதை விட்டுவிடுங்கள், மகளுக்கு கொஞம் சுதந்திரம் கொடுங்கள் ஐஸ்வர்யா என்று மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும் என் மகள் கையை பிடித்து பத்திரமாக அழைத்துச்செல்வேன் என்பதில் ஐஸ்வர்யா ராய் உறுதியாக இருக்கிறார் என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.