காஜல் அகர்வாலை நம்ம வைத்து ஏமாற்றிய இயக்குனர்! கோடியை கொடுத்து சரி செய்த தயாரிப்பாளர்..

Kajal Aggarwal Acharya
By Edward Apr 29, 2022 10:25 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து வந்த காஜல் இந்தியன் 2 உள்ளிட்ட ஒருசில படங்களில் இருந்து விலகினார். சமீபத்தில் கர்ப்பமாகி ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளா காஜல்.

இந்நிலையில் சிரஞ்சீவி, ராம் சரண், பூஜா ஹெக்டே நடித்த ஆச்சார்யா படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். அந்நேரம் பார்த்து காஜல் கர்ப்பமாகி சில காட்சிகளில் நடிக்காமல் போனது.

முக்கியத்தும் இல்லாத காட்சிகளில் காஜல் அகர்வால் இருப்பதால் இயக்குனர் அவரின் காட்சியை படத்தில் இருந்து நீக்கி விட்டார். இதனால் கஷ்டத்தில் இருந்து வந்தார் காஜல்.

இதனை சர்செய்ய ஆச்சார்யா படத்தின் தயாரிப்பாளர் காஜல் அகர்வாலுக்கு பேசிய 1.5 சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இல்லாத காட்சிக்கு காசும் கொடுத்திருந்ததை தெலுங்கு சினிமாவை சேர்ந்தை நடிகைகள் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

படம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.