ஆசிய கண்டம் அதிர்ச்சி!! ராகவா லாரன்ஸ் அரசியல் எண்ட்ரியை கலாய்த்த பிரபலம்..
ராகவா லாரன்ஸ்
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும் என்று சமீபத்தில் கூறி வீடியோவை பகிர்ந்தார். அதனையடுத்து, அரசியலில் நுழைந்து எந்த கட்சியில் இணைவார் என்ற கேள்விகள் எழுந்தது.
குறிப்பாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் லாரன்ஸ் போட்டிப்போடுவாரோ என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு வீடியோவை பகிர்ந்து விளக்கம் கொடுத்தார் லாரன்ஸ்.

அதில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது தர்மமாக இருக்காது, இத்தனை ஆண்டுகள் விஜய் சாருக்காக உழைத்தவர்கள் இருக்கும்போது நான், இப்போது கட்சியில் சேர்ந்தவுடனே சீட் வாங்குவது சரியல்லா. முதலில் ஒரு சாதாரண உறுப்பினராக வேலை செய்யவேண்டும், அதன்பின் தான் பொறுப்புகள் வரவேண்டும்.
திருச்சி கிழக்கில் போட்டியிடமாட்டேன் என்று தான் சொன்னேன். அதற்காக வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் 2 படங்களை முடித்துவிட்டு, எந்த அரசியல் கட்சியில் இணையப்போகிறேன் என்பதை அறிவிப்பேன் என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்
இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னை கருத்தை எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து ராகவா லாரான்ஸை கலாய்த்துள்ளார். அதில், ஆசிய கண்டம் அதிர்ச்சி என்று கூறி நக்கல் பதிவை போட்டுள்ளார்.
ஆசிய கண்டம் அதிர்ச்சி.. pic.twitter.com/ZpEPBdNG7E
— Blue Sattai Maran (@tamiltalkies) June 30, 2026