அம்பானி முதல் ஷாருக்கான் வரை!! சச்சின் மகன் அர்ஜுன் - சான்யா திருமண புகைப்படங்கள்..
சச்சின் மகன் அர்ஜுன் - சான்யா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தற்போது லக்னோ அணியில் இணைந்துள்ளார்.
26 வயதான அர்ஜுன், தன்னுடைய சகோதரி சாராவின் நெருங்கிய தோழியான சான்யா சந்தோக் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்களின் காதலுக்கு சாரா டெண்டுல்கர் தூதுவாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றுன் சான்யா சந்தோக்கினின் குடும்பத்தின் சம்மதத்துடன் இன்று மார்ச் 5 ஆம் தேதி காலை திருமணம் நடந்து முடிந்துள்ளது.
மும்பையில் பிரமாண்டமான முறையில் நடந்த இத்திருமணத்திற்கு, இந்திய கிரிக்கெட் அணியினர், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு அம்பானி குடும்பம் முதல், ஷாருக்கான், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் வந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.













