700+ படங்களில் நடித்த ஹீரோயின்!! மதுபழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்த தேசிய விருது நடிகை
ஊர்வசி
கேரளாவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 80, 90களில் கலக்கியவர் தான் நடிகை ஊர்வசி. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த ஊர்வசி, தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறர்.

இயக்குநர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிய ஊர்வசி, சமீபத்தில் தன்னுடைய 700வது படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் திருமண வாழ்க்கை குறித்து அவர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மது குடிக்கும் பழக்கம்
அதில், திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு சென்றேன். அங்கே இருந்த சூழல் எனக்கு புதிதாக இருந்தது. மாமியார் வீட்டில் அனைவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தனர்.

அந்தப் பழக்கத்தில் இருந்து தவிர்க்க முயன்று தோற்றேன். நானும் அதே பழக்க வழக்கங்களில் சிக்கிக்கொண்டேன். நாளடைவில் படப்பிடிப்பு முடித்து வீடு திரும்பியதும் மது குடிக்கும் பழக்கமாக எனக்கு மாறியது.
அதேநேரம் வீட்டு வீட்டு பொறுப்பை கவனிக்க எனக்கு விருப்பமில்லாத பல விஷயங்களை செய்ய வேண்டியிருந்தது. வீட்டில் என்னுடைய கருத்துக்களுக்கு மதிப்பு இல்லாத கோபத்திலும் வேதனையிலும் தினமும்இன்னும் அதிகமாக மது குடித்து போதைக்கு அடிமையாகினேன்.

மது அருந்த உணவு, தூக்கத்தை தவிர்த்தேன். உணவு, தூக்கம் எதுவும் வேண்டாம் என்று போதை தரும் மதுவை மட்டுமே நம்பி உடல்நலத்தை கெடுத்துக் கொண்டேன். வீட்டில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால், குடிப்பழக்கமும் அதிகருத்து என் உடல்நலம் மோசமடைய தொடங்கி, சரியான தூக்கம், பசி இல்லை, என் மனநிலை பாதிக்கப்பட்டது.

உடலில் பிரச்சனை ஏற்பட, என் நண்பர்களும், தனிப்பட்ட ஊழியர்களும் அந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வர உதவினர் என்று நடிகை ஊர்வசி ஓபனாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் உள்ளொழுக்கு என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.