அது பொய்யான தகவல்.. தன்னை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்

Gossip Today Actors Tamil Actors Sai Abhyankkar
By Karthick Raja Apr 23, 2026 11:30 AM GMT
Report

சாய் அப்யங்கர்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாய் அப்யங்கர். தனது ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த Dude படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அது பொய்யான தகவல்.. தன்னை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர் | Acting Isnt My Thing Sai Abhyankar Shuts Down

இதை தொடர்ந்து கருப்பு, ராக்கா ஆகிய திரைப்படங்கள் இவருடைய இசையில் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சாய் அப்யங்கர் ஹீரோவாக நடிக்கப்போவதாக தகவல் இணையத்தில் பரவின. இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

"அது பொய்யான தகவல். அது உண்மை கிடையாது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளேன். அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரும்.

அது பொய்யான தகவல்.. தன்னை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர் | Acting Isnt My Thing Sai Abhyankar Shuts Down

நான் நடிக்கவில்லை. சொல்லப்போனால் எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று கூட தெரியாது. எனக்கு யதார்த்தமாகவே நடிப்பு வருமென்றால், நான் நடிக்க போயிருப்பேன். ஆனால், எனக்கு நடிப்பில் அவ்வளவு திறமை கிடையாது" என கூறியுள்ளார்.