கழிவறை சுத்தம் செய்தேன்.. நடிகர் அப்பாஸ் வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான விஷயம்
Abbas
New Tamil Cinema
Tamil Cinema
Actors
Tamil Actors
By Karthick Raja
சாக்லேட் பாய் என 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய நடிகர் அப்பாஸ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

இந்த நிலையில், நடிகர் அப்பாஸ் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசினாராம்.
இதில் அவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது. அப்போது என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பைக் மெக்கானிக்காக வேலை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி கழிவறை சுத்தம் செய்தேன்.
மேலும் டாக்சி டிரைவராகவும் நியூசிலாந்தில் வேலை செய்துளேன்" என கூறினார்.
எப்போதுமே சிரித்துக்கொண்டு இருக்கும் நடிகர் அப்பாஸ் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்துள்ளதா என ரசிகர்கள் ஷாக்கியுள்ளனர்.