எனக்கு அதுதான் முக்கியம்!! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல் ஹாசன் கூப்பிட்டும் நோ சொன்ன நடிகர்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் அதுவும் பெண்களிடையே ஜாக்லேட் பாயாக திகழ்ந்து பிரபலமானவர் நடிகர் அப்பாஸ்.
காதல் தேசம் படத்தில் அறிமுகமாகி, விஐபி, பூச்சூடவா, படையப்பா, சூர்யவம்சம், ஆனந்தம், மலபார் போலிஸ், மின்னலே, பம்பல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சினிமாவில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு வாய்ப்பில்லாமல் போனதால் நியூசிலாந்து பக்கம் சென்றுவிட்டார்.
அங்கு பல வேலைகளை கற்று தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்த அப்பாஸ் தற்போது மீண்டும் சென்னை பக்கம் திரும்பி இருக்கிறார்.
திரும்பவும் நடிக்க ஆசைப்பட்டு அப்பாஸ் பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் கமல் சார் எனக்கு கால் செய்தார். 2017 அல்லது 18 இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள கேட்டார்.
நான் எப்படி 3 மாதம் வீட்டில் இருக்க முடியும் என்று அதை வேண்டாம் என்று அப்பாஸ் கமலிடம் சொன்னதாக தெரிவித்துள்ளார்.