பெண் குழந்தை வேண்டாம்.. நடிகர் சிரஞ்சீவி பதிலால் வெடிக்கும் பிரச்சனை
சிரஞ்சீவி
இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிரஞ்சீவி. இவர் தமிழில் 47 நாட்கள், ராணுவ வீரன், எங்கள் சுவாமி ஐயப்பன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் போலா ஷங்கர் என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்திருந்தனர்.
வெடிக்கும் பிரச்சனை
இந்நிலையில், தற்போது தனது பேத்தி, வேண்டாம் பேரன் தான் வேண்டும் என சிரஞ்சீவி பேசி இருப்பது சர்ச்சையாக மாறி இருக்கிறது.
அதில், "மகன் ராம் சரண் மீண்டும் பெண் குழந்தை பெறுவாரா என பயப்படுகிறேன், அவர் மூலமாக எனக்கு பேரன் தான் வேண்டும். அப்போது தான் குடும்ப பாரம்பரியம் தொடரும்" என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, பெண் குழந்தைகளை பற்றி அவர் இப்படி மோசமாக பேசி இருக்க கூடாது என அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இருக்கிறது.
ஆண் மற்றும் பெண் என இருவருமே குடும்ப பாரம்பரியத்தை தொடர்பவர்கள் தான் என்று கூறி சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள் சிலரும் சிரஞ்சீவிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.