கடுப்பான இயக்குநர்!! விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. சரத்குமார் உடைத்த ரகசியம்

Sarathkumar Nayanthara Actress
By Bhavya Mar 13, 2025 03:45 PM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் டெஸ்ட். இப்படத்தை நேரடியாக OTT- யில் வெளியிடுகின்றனர்.

அதை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பிரம்மாண்டமாக துவங்கியது. இதுமட்டுமின்றி ராக்காயி, hi, மண்ணாங்கட்டி, dear students என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மலையாளத்தில் நடித்து வந்த நயன்தாரா, சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடுப்பான இயக்குநர்!! விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. சரத்குமார் உடைத்த ரகசியம் | Actor About Nayanthara First Day Shooting

உடைத்த ரகசியம் 

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சம்பவம் குறித்து சரத்குமார் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், "ஐயா படத்தில் நயன்தாரா முதல் நாள் வரும் போது,  பயங்கரமான மாடர்ன் உடையில் வந்தார். அதை பார்த்துவிட்டு கடுப்பான இயக்குநர் ஹரி நயன்தாராவை கூட்டிட்டு போகுமாறு விரட்டி விட்டார்.

இவர் தான் இந்த படத்தின் ஹீரோயின்னா செட் ஆகுது, சாய்ங்காலம் காஸ்ட்யூம் கொடுத்து பார்க்கலாம் என்று சொன்னார்" என கூறியுள்ளார்.  

கடுப்பான இயக்குநர்!! விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. சரத்குமார் உடைத்த ரகசியம் | Actor About Nayanthara First Day Shooting