வடிவேலு ஈகோ பிடித்தவர்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொடுமை.. நடிகர் சொன்ன சீக்ரெட்

Tamil Cinema Vadivelu Tamil Actors
By Bhavya Jan 17, 2025 06:30 AM GMT
Report

 வடிவேலு

மதுரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று வைகை புயல் வடிவேலு. இன்றும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மாமன்னன் என்ற திரைப்படத்தில் முதல் முறையாக சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு ஈகோ பிடித்தவர்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொடுமை.. நடிகர் சொன்ன சீக்ரெட் | Actor About Vadivelu Character

தற்போது, வடிவேலு பகத் பாசிலுடன் இணைந்து 'மாரீசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். வடிவேலு குறித்து பலர் அவ்வப்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதை நம்மால் காண முடிகிறது. 

அந்த வகையில், நடிகர் ஜெயமணி தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் வடிவேலு குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

சீக்ரெட்

அதில், " வடிவேலு மிகவும் ஈகோ பிடித்தவர். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாற்காலியில் அமர்ந்தால் சிங்கமுத்து உள்ளிட்டவர்கள் கீழேதான் அமர்வார்கள். சரி எதற்காக இது போன்ற விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்பதற்காக தான் நான் பெரிதும் பேசுவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.   

வடிவேலு ஈகோ பிடித்தவர்!! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொடுமை.. நடிகர் சொன்ன சீக்ரெட் | Actor About Vadivelu Character