அடம்பித்ததால் செருப்பால் அடித்த தந்தை!! உண்மையை உடைத்த இயக்குனர் செல்வராகவன்
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தன் தம்பி தனுஷை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் செல்வராகவன். தற்போது இயக்குவதை தாண்டி ஒரு நடிகராகவும் திகழ்ந்து பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.
தனுஷின் மிகப்பெரிய பக்கபலமாக இருந்து உயர்த்திவிட்ட பெருமை செல்வராகவனுக்கு உண்டு. சமீபத்தில் மோகன் ஜி இயக்கத்தில் பகாசுரன் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன்.

தன் தம்பி தனுஷின் வாத்தி படம் வெளியான அதே நாளில் பகாசுரன் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தந்தை தன்னை செருப்பால் அடித்த சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது சினிமா ஆசை வந்ததாகவும் தன் தந்தை அதை கேட்டு தன்னை செருப்பால் அடித்ததாகவும் கூறியிருக்கிறார்.
சினிமாலாம் வேண்டாம் வெளிநாட்டுக்கு சென்று மேற்படிப்பு தொடருமாறு தந்தை கஸ்தூரி ராஜா கூறி அடித்ததாக தெரிவித்திருக்கிறார் செல்வராகவன். அதை மீறி இயக்குனராக அவதாரம் எடுத்த டாப் இயக்குனர் லிஸ்ட்டில் திகழ்ந்து வருகிறார் செல்வராகவன்.