தனுஷுக்கு இந்த முஞ்சி..பங்கமாக கலாய்த்த இயக்குநர்!! ட்ரெண்ட்டாகும் வீடியோ..
தேரே இஸ்க் மே
இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவாகி வரும் நவம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் தேரே இஸ்க் மே.
இப்படத்தின் பாடல்களும், ட்ரைலரும் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பையும் வரவேற்பையும் பெற்றது. படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ் படக்குழுவுடன் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது தனுஷ் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தனுஷுக்கு இந்த முஞ்சி
அவர் பேசுகையில், இப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பதற்கு எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு அவர், உனக்கு தான் லவ் ஃபெயிலியர் முகம் சரியாக இருக்கிறது என்று சொன்னார்.

அன்று நான் வீட்டுக்கு சென்றப்பின் கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவர் அன்று கிண்டலாக சொன்னாலும் அதனை நான் எனக்கான பாராட்டாகவும் எடுத்துக்கொண்டேன் என்று தனுஷ் சிரிப்புடன் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
#Dhanush : I asked the director "why you keep calling me for roles like these..?" He said,"You have a Great love failure face.."😃 That day I went back & kept looking at my face in the mirror.. But I take it as a compliment..🤝pic.twitter.com/3GlnA2BiL0
— Laxmi Kanth (@iammoviebuff007) November 22, 2025