ஹீரோ டூ கெஸ்ட் ரோல்!! பிக்பாஸ்-க்கு பின் விஜய் டிவியில் இருந்து வெளியேறிய அர்னவ்..

Star Vijay Serials Zee Tamil Bigg Boss Tamil 8 Arnav Amjath
By Edward Dec 14, 2024 09:45 AM GMT
Report

பிக்பாஸ் 8 அர்னவ்

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 69 நாட்களை கடந்து ஒளிப்பரபாகி வருகிறது.

கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து முடிந்த நிலையில் இந்த வாரம் சத்யா எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ டூ கெஸ்ட் ரோல்!! பிக்பாஸ்-க்கு பின் விஜய் டிவியில் இருந்து வெளியேறிய அர்னவ்.. | Actor Arnav Special Appearance Veera Serial Zee T

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்னவ், பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு 2வது வாரமே வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி அர்னவ் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த அர்னவ், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் வீரா என்ற சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.