பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகனின் காதலி இந்த நடிகையா? காரில் எடுத்துக்கொண்ட புகைப்படம்

Bharathi Kannamma Serials
By Edward Jul 06, 2022 07:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டிகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. நடிகர் அருண் பிரசாத், ரோஷினி ஹரிபிரியன் ஜோடியாக நடித்து வந்த இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று டிஆர்பி-யிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது அந்த சீரியலில் இருந்து ரோஷினி சில காரணங்களால் வெளியேறியதும் அவருக்கு பதில் விளம்பர நடிகை வினுஷா என்பவர் கண்ணம்மாவாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவர் எப்படி அதற்கு செட்டாகுவார் என்ற சந்தேகம் எழுந்தது.

பின் அவர் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அருண் பிரசாத் கூடிய சீக்கிரமே சீரியலில் இருந்து விலகவுள்ளார் என்ற செய்திகளும் இணையத்தில் வைரலானது. அதற்கு காரணம் அருண் பிரசாத் திருமணம் செய்யவுள்ளதாகவும் சில படவாய்ப்புகள் வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியான நடித்து வரும் விஜே அர்ச்சனாவை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுவது வெளியில் செல்வதுமாக இருந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது.

விஜே அர்ச்சனாவுடன் அருண் பிரசாத், காரில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. காரின் முன்பகுதியில் குக்வித் கோமாளி பிரபலமான நடிகை ரித்திகாவும் இருக்கிறார்.

GalleryGallery