என் பேச்சில் என்ன தவறு..தப்பா பார்ப்பது முட்டாள் தனம்!! நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டம்...

Vijay Deverakonda Rashmika Mandanna Tamil Actress Actress
By Jai Oct 22, 2026 12:00 PM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

இந்திய சினிமாவின் நேஷனல் கிரஸ் என்று புகழப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப்பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, கணவருடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

என் பேச்சில் என்ன தவறு..தப்பா பார்ப்பது முட்டாள் தனம்!! நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டம்... | Rashmika Mandanna Reply For Speech Her South

சமீபத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த ரனபாலி படம் ரிலீஸாக 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகாவை பலரும் அவர் பேசிய விதத்தை வைத்து விமர்சித்து வந்தனர். இதையறிந்த ராஷ்மிகா, தக்க பதிலடியான ஒரு கருத்தை கொடுத்துள்ளார்.

முட்டாள் தனம்

அதில், என் பேச்சில் தென்னிந்திய உச்சரிப்பு இருப்பதாகக் கூறுவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனென்றால், நான் தென்னிந்தியாவை சேர்ந்தவர், எனவே என் பேச்சில் அந்த உச்சரிப்பு இருப்பது இயல்பானது தான். அதை தவறாகப் பார்ப்பது முட்டாள்தனம்.

என் பேச்சில் என்ன தவறு..தப்பா பார்ப்பது முட்டாள் தனம்!! நடிகை ராஷ்மிகா மந்தனா காட்டம்... | Rashmika Mandanna Reply For Speech Her South

என்னுடைய திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தே நடிப்பு, மொழி, உச்சரிப்பு என்று பல விஷயங்களுக்காக விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால் எதற்காகவும் என்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளவிரும்பவில்லை. ஒரேவொரு துறையில் மட்டும் பணியாற்றாமல், அனைத்து மொழித் திரைப்படங்களிலும் நடிக்க விரும்பினேன் என்று பேசியுள்ளார் நடிகை ராஷ்மிகா.