வருமானமில்லாமல் பெயிண்டர் வேலை!! சர்க்கரை நோயால் காமெடி நடிகருக்கு ஏற்பட்ட நிலை..

Actors Tamil Actors
By Edward Jun 15, 2023 06:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை கலைஞராக பல படங்களில் நடித்து பிரபலமானவரில் ஒருவர் பவா லட்சுமணன். மாயி, ஆனந்தம், அரசு, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வந்தார்.

வா மா மின்னல் என்ற வசனம் இன்றுவரை அனைவராலும் நினைவுக்கூறப்படுவார். அப்படிப்பட்ட பவா லட்சுமணன், சமீபகாலமாக வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போனார். வருமானமின்றி தவித்து வந்த அவர் பெயிண்டர் வேலையை பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார்.

சினிமாத்துறையினர் யாரும் கண்டுக்கொள்ளாமல் இருந்த அவருக்கு நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதன் தாக்கம் அதிகரித்து சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதித்திருந்த பவா லட்சுமணின் காலின் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

Gallery