கொடிகட்டி பறந்த சூப்பர் ஸ்டார்!! நடுத்தெருவுக்கு வந்து மரணமடைந்த கதை தெரியுமா?
பகவான் தாதா
திரைத்துறையில் எப்போது அதிர்ஷ்டம் வரும் எப்போது காணாமல் போகும் என்பது தெரியாது. அப்படி கோடிகோடியாய் கொட்டிக்கொடுக்கும் சினிமாவில் அதையே பறிக்கொடுத்து காணாமல் போன ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் பற்றி பார்ப்போம். பாலிவுட்டின் கடவுள் என்று கூறப்பட்டவர் தான் பகவான் தாதா என்ற நடிகர்.
1940 - 50 காலக்கட்டத்தில் இந்தி மொழியில் நடித்தும் இயக்குநர், தயாரிப்பாளர் என்று கொடிக்கட்டி பறந்தார்.. ஆரம்ப நாட்களில் கூலி வேலை செய்து வந்த பகவான் தாதா, நடிப்பில் ஆர்வம் கொண்டு கிரிமினல் என்ற படத்தில் அறிமுகமாகி பஹத், கிசான் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார்.
1951ல் வெளியான அல்பெலா என்ற படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து வசூலை வாரிக்குவித்தது. தமிழில் ஒருசில படங்களில் நடித்த பகவான் தாதா, அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்தார். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கார் என சொகுசு கார்கள், மும்பையின் ஜுஹூ பகுதியில் 25 அறைகள் கொண்ட ஆடம்பர பங்களா என்று வாழ்ந்து வந்தார்.
ஆனால் கிஷோர் குமார் நடிப்பில் தயாரித்த ஹென்சே ரெஹ்னா என்ற படம் ட்ராப் ஆனதால் அத்தனை சொத்துக்களையும் விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
வறுமை நிலையில் தள்ளப்பட்ட நடிகர் பகவான் தாதா, ஆடம்பர பங்களாவில் இருந்து வெளியேறி மும்பையில் ஒற்றை அறை கொண்ட வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
திரைத்துறை கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஒதுக்க வாழவே வழியின்றி 2002ல் மாரடைப்பால் மரணமடைந்தார்.