அன்று கார் கிளீனர்.. இன்று பல லட்சம் கொடுத்து கார் வாங்கிய விஜய் டிவி புகழ்!
புகழ்
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி ஷோக்களில் கலக்கப்போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். காரணம் சிரிக்க மறந்த மக்களையும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய சிரிக்க வைத்துள்ளது.
இந்த ஷோக்கள் மூலம் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி வந்த புகழுக்கு குக் வித் கோமாளி என்ற ஷோ ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த ஷோ கொடுத்த பிரபலம் இப்போது நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
நடிகர் புகழ் 2 ஆண்டுகளுக்கு முன்பு பென்ஸி ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கேரியரில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரத்து வரும் புகழ், லிமிட்டட் எடிஷன் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
பல லட்சம்!
இதுகுறித்த புகைப்படத்தை இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மஹிந்திரா நிறுவனம் பேட் மேன் ரசிகர்களுக்காக கார் ஒன்றை லன்ச் செய்தது.
இந்த கார் 999 கார்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.33 லட்சம் விற்பனையாகும் இந்த காரை தற்போது புகழ் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் சென்று வாங்கி இருக்கிறார்.

