எங்க வீட்டுல ஒரு பொண்ணாட்டி தானே இருக்கமுடியும்.. நோஸ்கட் கொடுத்த நடிகர் பரத்..
நடிகர் பரத்
தமிழ் சினிமாவில் சென்சேஷ்னல் நடிகராக திகழ்ந்து தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வரும் நடிகர்கள் ஒருவராக இருப்பவர் நடிகர் பரத். தற்போது Once upon a Time in Madras என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நடிகை அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது. அதில் படத்தின் இயக்குநரிடம், படத்தில் ஒரு ஹீரோயினை வைத்து படம் எடுப்பது கஷ்டம். அதிலும் இத்தனை ஹீரோயின் இருக்காங்க, நல்ல அழகான நடிகர் பரத் இருக்கும் போது எல்லா நடிகைகளையும் வைத்து படம் எடுக்குகிறீர்கள்.
எல்லா நடிகைகளுடனும் காமினேஷன் வையுங்கள் என்று பரத் சொல்லி இருக்கிறாரா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார். ஆனால் அப்படி பரத் எந்த கேள்வியும் கேட்கவில்லை, கதை என்ன சொல்கிறதோ அதை பண்ணுங்க, ஹீரோவுக்காக எதையும் செய்யாதீர்கள் என்றும் என்னிடம் கூறியதாக படத்தின் இயக்குநர் பதிலளித்தார்.

அதற்கு பரத், ஒரே படத்தில் நான், 5 ஹீரோயின் நடிக்கிற படம் இல்லை, பக்கத்து வீட்டுக்கதை, அந்த வீட்டுக்கதை என்று 4 வீட்டு கதை வந்து கடைசியில் சேரும். எங்க வீட்டில் ஒரு பொண்ணாட்டி தானே இருக்க முடியும், அவ்வளவு தான். அதோட அமிக்கிட்டு உட்காரணும் என்று பரத் காமெடியாக பதிலளித்திருக்கிறார்.