காசு கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வருத்தபட்ட பிரபல நடிகர்..

Sivakarthikeyan Tamil Actors Ayalaan
By Jai Jan 23, 2024 03:49 AM GMT
Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி சில மாதங்களாக பல தவறான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. டி இமான் சமந்தமான விசயம் தற்போது தான் அமைதியான நிலையில், சிவகார்த்திகேயனின் ஆரம்பகால வாழ்க்கையில் உடனிருந்த ஒரு நடிகர் ஒரு ஷாக்கான விசயத்தை பகிர்ந்திருக்கிறார்.

காசு கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வருத்தபட்ட பிரபல நடிகர்.. | Actor Black Pandi Smash Sivakarthikeyan Real Face

கனா காணும் காலங்கள், அங்காடி தெரு போன்ற பல படங்களில் நடித்து நடிகர் பிளாக் பாண்டி, சிவகார்த்திகேயன் பற்றிய சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக சென்றிருக்கிறோம்.

ஒரே மேடையில் இருவரும் காமெடி நிகழ்ச்சி செய்தோம். சிவகார்த்திகேயன், அருண் ராஜா காமராஜுக்கும் நான் சம்பளம் கொடுத்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ஒருமுறை சிவகார்த்திகேயன் பார்க்கும் போது பேசனும் என்று கூறினேன்.

தம்பிக்கு குழந்தை பிறந்தாச்சு, தங்கைக்கும் குழந்தை பிறந்தாச்சு.. சிம்பு உங்களுக்கு எப்போ கல்யாணம்

தம்பிக்கு குழந்தை பிறந்தாச்சு, தங்கைக்கும் குழந்தை பிறந்தாச்சு.. சிம்பு உங்களுக்கு எப்போ கல்யாணம்


ஆனால் சிவகார்த்திகேயன், மேனேஜரிடம் 20 ஆயிரம் காசு கொடுத்து அனுப்பினார். என் அம்மா தம்பி அவர் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கொடுங்கள், காசு வேண்டாம் என்று மேனேஜரிடன் கூறினார். நானும் அதைத்தான் சொன்னேன்.

இது எனக்கு தேவையில்லை, நான் பேசனும் என்று சிவாவிடம் கூறுங்கள் என்றும் நடிப்புக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினேன். அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, அதன்பின் சிவகார்த்திகேயன் பேசவில்லை. 3 ஆண்டுகளாக கண்டுக்கொள்ளவில்லை என்று பிளாக் பாண்டி தெரிவித்திருக்கிறார்.