திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனம் பரப்புறாங்க!! பராசக்தி பட நடிகர்..
பராசக்தி
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இப்படத்தை இயக்க ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா இணைந்து நடித்திருந்தனர்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் சிலர் வேண்டுமென்றே சோசியல் மீடியாக்களில் தவறான விமர்சனத்தை பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், இப்பிரச்சனையை சம்பந்தப்பட்ட ஒரு நடிகர் தேவ் ராம்நாத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
நடிகர் தேவ் ராம்நாத்
அதில், உங்கள் படத்துடன் சேர்த்து பராசக்தி படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்ற காரணத்திற்காக ஒரு படத்தில் நாசமாக்க எந்த உரிமையும் உங்களுக்கு கிடையாது. முதலில் படத்தில் ரிலீஸ் தேதியை தீர்மானித்து, நாங்கள் தான் அறிவித்தோம். உங்கள் படத்தை நிறுத்த நாங்கள் முயற்சி செய்தோமா? அப்படியொரு யோசனையே எங்கள் சிந்தனையில் கிடையாது.

நான் சென்னை, மும்பையிலுள்ள தணிக்கை வாரியத்தில் சென்சாரில் ஏற்பட்ட தடைகளை எல்லாம் தாண்டி படத்தை ரிலீஸ் செய்யும் போராட்டத்தில் இருந்தேன்.
படத்தின் ரிலீஸுக்கு 18 மணிநேரத்துக்கு முன் தான் எனக்கு சென்சார் கிடைத்தது. திட்டமிட்டே நெகட்டிவ் விமர்சனங்கள், பழைய வீடியோக்கள் பரப்புவது, தியேட்டருக்கு சென்று அரசியல் கோஷங்களை எழுப்புவது, புக் மை ஷோவில் ரேட்டிங்கை குழப்புவது என பல காரியங்களை செய்து வருகிறீர்கள்.
இது போட்டி கிடையாது, இதுபோன்று ஒரு பெரிய படத்துக்கு கடந்த ஆண்டும் இதே மாதிரியான விசயத்தை தான் நீங்கள் செய்தீர்கள் என்று கொந்தளித்துள்ளார்.