மலையாள நடிகை வழக்கின் தீர்ப்பில் திலீப் விடுதலை!! நேரிலே பார்த்தவர் உருக்கம்..
மலையாள சினிமாவில் நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்திய வழக்கில் கடந்த 8 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்ட விவகாரம் தற்போது வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்ஹ நிலையி வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
டப்பிங் கலைஞர் பாக்ய லட்சுமி
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையை நேரில் சென்று சந்தித்த மலையாள டப்பிங் கலைஞர் பாக்ய லட்சுமி, இதுகுறித்த தன்னுடைய கருத்தினை பகிர்ந்துள்ளார். தீர்ப்பு நாளில் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட நடிகையின் வீட்டில் இருந்தோம், நான் நடிகையின் இரு சகோதரிகள் மற்றும் அவரது தோழிகள் உட்பட அங்கு இருந்தோம். நடிகையின் அம்மாவும் எங்களுடன் இருந்தார். நடிகை மட்டும் அவரது அறையில் இருந்தார்.
நாங்கள் அனைவரும் டிவி முன் அமர்ந்து நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது 7வது குற்றவாளி விடுவிக்கப்பட்டதும் நான் டிவியை நிறுத்திவிட்டு, இனி யாரும் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறினேன். நடிகை மிகவும் அதிர்ச்சியாக அமர்ந்து கொண்டு, இதற்கு பின் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதும் எங்களிடம் பதிலே இல்லை. மாலை வரை அனைவரும் அமைதியாக இருந்தோம், யாருடம் சாப்பிடக்கூட இல்லை.

மேல்முறையீடு
மேல்முறையீடு செய்யக்கூட நாங்கள் எதுவும் பேசவில்லை, நடிகையை ஆறுதல்படுத்துவது தான் எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. நடிகை ஏற்கனவே இந்த விசாரணையில் பல நெருக்கடிகள் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானார்.
ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருமுறையும் நடிகையின் கணவர் போன் செய்து விசாரித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் வெளிநாட்டில் இருந்து அவரால் வரமுடியவில்லை என்று பாக்ய லட்சுமி தெரிவித்துள்ளார். இதிலிருந்து நடிகை சார்பாக மேமுறையீட்டுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்று பலரும் பேசி வருகிறார்கள்.