இது என்னடா சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு வந்த கொடுமை! கள்ளக்காதலில் கணவரை மிஞ்சிய ஜெயஸ்ரீ..
சின்னத்திரை தொலைக்காட்சியில் சக நட்சத்திரங்களுடன் தொடர்பு வைத்திருக்கும் கிசுகிசு செய்திகள் பல வெளியாகி வைரலானது. அதில், ஈஸ்வரன் - மகாலட்சுமி கள்ளக்காதல் பெரியளவில் பேசப்பட்டது. நடிகர் ஈஸ்வர் தன் தோழியும் நடிகையுமான ஜெயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெற்றார்.
இதையடுத்து சில ஆண்டுகளில் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்ட ஈஸ்வர் நடிகை மகாலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் ஈஸ்வர் - மகாலட்சுமி மீது ஜெயஸ்ரீ புகாரளித்தார். அதன்பேரில் போலிசார் கைது செய்தனர். பின்வெளியே வந்த ஈஸ்வர் அவரை பிரிந்து விவாகரத்து கேட்டு சமரசமாக பிரிய திட்டமிட்டனர்.
இந்நிலையில், ஈஸ்வர் தன் மனைவி ஜெயஸ்ரீக்கு தயாரிப்பாளர் சண்முகம் கொலை மிரட்டல் விடுப்பதாக போலிசில் புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கூறியதில், ஈஸ்வர் மகன் ராகவேஷும் ஜெயஸ்ரீயும் தற்போது லிவ்விங் டு கெதரில் இருந்து வருவதாகவும் அது அவரது தந்தை சண்முகத்திற்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
அவர்களை பிரிக்க நீங்கள் உதவவேண்டும் என்று என்னிடம் கேட்டார். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினேன். இதனால் ஜெயஸ்ரீயை சண்முகம் கார் ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதில் தன் பேர் இடம் பெறாமல் இருக்க தான் நான் புகாரளிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜெயஸ்ரீ பல ஆண் நண்பர்களுடன் பழகி வருவதாகவும் விவாகரத்திற்கு கோர்ட்டுக்கு வரும் போது கூட ஆண்களுடன் தான் வருவார் என்று கூறியுள்ளார் ஈஸ்வர்.