ரசிக வெறியை தோலுரித்து காட்டிய நீயா நானா நீயா நானா நிகழ்ச்சி
Neeya Naana
By Karthick Raja
விஜய் டிவி-ல் பல வருடங்களால ஒளிப்பரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என லட்சக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நாம் பேச வேண்டிய, தெரிந்துக்கொள்ள வேண்டிய பல டாபிக்-யை தைரியமாக எடுத்து பேசுவார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் நடிக மற்றும் தனி நபர் துதிபாடல் செய்யும் மக்கள் ஒரு பக்கம், இதை எதிர்க்கும் மக்கள் இன்னொரு பக்கம் என ஒரு டிபேட் நடத்தினர். அதில் நடிக வெறியில் உள்ளவர்கள் பேசியதை கண்டு நிகழ்ச்சி பார்த்த ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஒரு நடிகன் போஸ்டரை கிழித்ததால் தன் உயிரை கூட மாய்த்துக்கொள்ள தாயராக இருந்த பெண், அவரை நேரில் கண்டால் கட்டிபிடித்து முத்தம் கொடுப்பேன் என்று சொல்பவர் என அவர்கள் பேச பேச தமிழ் சமூகம் எத்தனை மோசமான நிலையில் உள்ளது என்பதை கண்முன் கொண்டு வந்துவிட்டனர்.