தன்னைவிட வயதில் மூத்த நடிகையுடன் டேட்டிங்கில் துருவ் விக்ரம்.. லீக்கான முத்த போட்டோ

Anupama Parameswaran Viral Photos Dhruv Vikram
By Bhavya Apr 13, 2025 07:30 AM GMT
Report

துருவ் விக்ரம்

ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம். அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் படத்தில் விக்ரம் உடன் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

தற்போது துருவ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தன்னைவிட வயதில் மூத்த நடிகையுடன் டேட்டிங்கில் துருவ் விக்ரம்.. லீக்கான முத்த போட்டோ | Actor In Love With Elder Actress

டேட்டிங்

இந்நிலையில், நடிகை அனுபமா மற்றும் துருவ் விக்ரம் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு இணையத்தில் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Spotify-ல் ப்ளூ மூன் என்ற பிளே லிஸ்டில் அனுபமா போல் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணும், துருவ் விக்ரம் போல் தோற்றமளிக்கும் ஒரு ஆணும் முத்தம் கொடுக்கும்படி புகைப்படம் ஒன்று உள்ளது.

தன்னைவிட வயதில் மூத்த நடிகையுடன் டேட்டிங்கில் துருவ் விக்ரம்.. லீக்கான முத்த போட்டோ | Actor In Love With Elder Actress

இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்ற செய்தி பரவ துவங்கிவிட்டது. ஆனால், இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை தன்மை உள்ளது என்று தெரியவில்லை.

துருவ்வுக்கு தற்போது 27 வயது ஆகிறது. ஆனால் அனுபமாவுக்கு 29 வயதாம் அவரை விட அனுபமா வயதில் மூத்தவர் என்று தெரியவந்துள்ளது.