இனிமே அதை செய்யமாட்டேன்.. நான் செத்துட்டேன்னு சொன்னாங்களா!! 69 வயது நடிகர் ஜனகராஜ் அதிர்ச்சி..

Gossip Today Actors Tamil Actors Janagaraj
By Edward May 21, 2024 07:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகை ஜனகராஜ். ரஜினி, கமல், பாண்டியன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த ஜனகராஜ், உடல் நலக்குறைவு காரணமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார்.

இனிமே அதை செய்யமாட்டேன்.. நான் செத்துட்டேன்னு சொன்னாங்களா!! 69 வயது நடிகர் ஜனகராஜ் அதிர்ச்சி.. | Actor Janagaraj Shocked About Viral Her Dead News

ஒருசில படங்களில் முக்கிய ரோலில் நடித்து வந்த ஜனகராஜ், 96 படத்தில் காவல் தெய்வம் என்ற வாட்ச்மேன் ரோலில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். அப்படத்தினை தொடர்ந்து தா தா 87, ஒபாமா உங்களுக்காக போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 69 வயதை எட்டியிருக்கும் ஜனகராஜ், பேச முடியாமல் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தற்போது வெப் தொடர்களில் நடிக்கவிருப்பதால் சில காலம் பேட்டி கொடுக்காமல் இருப்பேன் என்றும் அதன்பின் என்னை பார்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பத்திரிக்கையில் நீங்கள் இறந்துவிட்டீர்கள்? என்றும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டீர்கள்? என்று செய்திகள் பரவியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

இனிமே அதை செய்யமாட்டேன்.. நான் செத்துட்டேன்னு சொன்னாங்களா!! 69 வயது நடிகர் ஜனகராஜ் அதிர்ச்சி.. | Actor Janagaraj Shocked About Viral Her Dead News

என்னது நான் இறந்துட்டன்னு செய்தி வந்துச்சா, அப்படியா? என்று வாய்ப்பிளந்தபடி ஷாக்காகியிருக்கிறார் ஜனகராஜ். எல்லாமே நம்ம பசங்க தான் சார் எழுதுறது தான், நம்ம நண்பர்கள் தான் எழுதுவார்கள், வேற யாரு எழுதுவார்கள். எல்லாம் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள், அவர்கள் அவர்களின் வேலை பார்ப்பார்கள், இவ்வளவும் ஒரு இன்ட்ரஸ்ட்-காக தான் என்று வெகுளித்தனத்தோடு கூறியிருக்கிறார் நடிகர் ஜனகராஜ்.