ஆண்ட்டியின் கட்டுப்பாட்டில் இருந்த கரண்.. பட வாய்ப்பு குறைய இது தான் காரணமா?
Karan
By Dhiviyarajan
90 களில் மிரட்டல் வில்லன், ஹீரோ என வலம் வந்தவர் தான் நடிகர் கரண். இவர் ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
இவர் தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் 1994 -ம் ஆண்டு வெளியான "நம்மவர்" படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவில் சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

கரண் சினிமாவில் இளம் நடிகராக இருந்த போது ஆண்ட்டி வயதான பெண்ணின் கட்டுப்பாட்டில் இருந்தாராம்.
மேலும் அந்த பெண் கரணுக்கு மேனேஜராக இருந்தார். அவரால் தான் கரண் சினிமாவில் பட வாய்ப்பு இழந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை என்று கூறமுடியாது என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
