கமல் ஹாசன் - SU அருண்குமார் படத்தின் தலைப்பு 'சண்டியர்'.. First லுக் போஸ்டர் இதோ
இயக்குநர் SU அருண்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கமல் நடிப்பில் 2004ல் வந்த விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என்றுதான் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தினால் அந்த டைட்டிலை விருமாண்டி என கமல் ஹாசன் மாற்றினார்.

இந்த நிலையில், தற்போது அதே டைட்டிலை மீண்டும் கமல் கையில் எடுத்திருக்கிறார் என்பதால் சர்ச்சை மீண்டும் வருமா என பேச்சு சினிமா துறையில் எழுந்திருக்கிறது.
கமல் அவரது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தான் இந்த படத்தை எடுக்கிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.
SANDIYAR சண்டியர் 🔥 #KamalHaasan #SUArunkumar #Sandiyar #சண்டியர் #SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan @ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2026