கமல்ஹாசனை நம்பி மணிரத்னத்தை அறிமுகப்படுத்திய நடிகர் கிட்டி! தற்போது எப்படி இருக்கிறார்?
தமிழ் சினிமாவில் 80களில் இரு பிரம்மாண்ட நடிகர்களான கமல்ஹாசன் - ரஜினி இவர்களுக்கென்ற ஒரு வில்லன்கள் சூட்டாக இருப்பார்கள். அதிலும் குணச்சித்திர ரோலுக்கு இவர் தான் வேண்டும் என்று இருவரும் தேர்வு செய்வார்கள்.
அப்படி இருந்தவர் தான் நடிகரும் இயக்குனருமான கிட்டி. மணிரத்னத்தின் நாயகன் படத்தில் அறிமுகமாகியவர் கிட்டி. அப்படத்தினை அடுத்து ரஜினி, கமல், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் 2019ல் நடிகை நயன் தாரா நடித்த அறம் படத்தில் அரசு அதிகாரியாக நடித்திருப்பார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் மணிரத்னம் படத்தில் நான் அறிமுகமாகினாலும், அவரை கமல் ஹாசனுக்கு அறிமுகப்படுத்தியதே நான் தான் என்று கூறியுள்ளார்.
கமல் அண்ணன் சாரு ஹாசன் தொழில் சம்பந்தமாக என்னை கமல்ஹாசனை சந்திக்க வைத்தார். அதன்பின் தான் மணிரத்னமும் நானும் கமல் ஹாசனை பார்க்க சென்றோம் என கூறியுள்ளார். இந்த விஷயத்தை கூட கமல் ஹாசன் ஒரு மேடையில் குறிப்பிட்டு பேசியிருப்பார்.