என்ன பத்தி அப்படி இப்படினு பேசுங்க! விளம்பரத்திற்காக ஏங்கும் பிரபல நடிகர்..

actor controversy gossips
By Edward Apr 13, 2021 06:37 AM GMT
Report

சினிமாவில் பிரபலங்கள் சர்ச்சைகளிலும் கிசுகிசுக்களிலும் சிக்குவது இயல்பு தான் தெரியாமல் யாரும் அப்படி செய்வதில்லை. அதுபோல் சில பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்தியும், விளம்பரப்படுத்திக் கொள்ளவும் வேண்டுமென்ற சில விஷயங்களில் நுழைந்து விடுவார்கள்.

அப்படி, கடந்த சில மாதங்களாகவே இந்த முன்னணி நடிகரை பற்றிய பேச்சுக்கள் தான் இந்திய சினிமாவில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு படத்தில் உச்சத்தைத் தொட்டார் என்றால் நம்ப முடிகிறதா.

சமீபத்தில் வெளியான அந்த முன்னணி நடிகரின் படம் ஒன்றில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றவர் அந்த நடிகர். அதனைத் தொடர்ந்து அந்த நடிகருக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

ஆனால் அந்த நடிகரைப் பற்றி சமீபகாலமாக ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகையுடன் தொடர்பு எனவும், அதிக அளவில் சம்பளம் கேட்கிறார் எனவும் சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதை பார்த்தும் பார்க்காமல் இருக்கிறாராம்.

இது பற்றி தன்னுடைய நண்பர் வட்டாரங்கள் தெரிவித்து போது, சர்ச்சைகள் அளவுக்கதிகமாக வந்தால் தான் சம்பளம் நினைத்ததை விட அதிகமாக கிடைக்கும் என ஆறுதல் சொன்னவர்களை வாயடைக்க வைத்து விட்டாராம்.

அந்த நடிகரின் ஒரே ஒரு குறிக்கோள் பணம் தான் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பெயர் கெட்டாலும் பரவாயில்லை பணம் சம்பாதித்தால் போதும் என்று சுற்றித்திரிந்து வருகிறார்.