பொம்பளையா இருந்தா அவரை காதலித்திருப்பேன்.. நடிகர் விஜய்யை வர்ணித்த நடிகர்..
தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பல லட்சக்கணக்கான ரசிகர்களை தென்னிந்திய சினிமாவில் வைத்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
அப்படி அவரின் ரசிகர்களை போன்ற சினிமாத்துறையிலும் பல நட்சத்திரங்கள் அவருடன் நடிப்பதை பெருமையாக கருதுவார்கள். மேலும் விஜய்யின் குணாதியசத்தினை பற்றி பேட்டிகளிலும் பிரபலங்கள் கூறி வருவார்கள்.
அப்படி நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் டெலிபோன் ராஜ். பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் டெலிபோன் ராஜ் வடிவேலுவை பற்றி பல இடங்களில் பெருமையாக பேசி வருகிறார். அப்படி வடிவேலுவை போல் தளபதி விஜய்யை ரொம்ப பிடிக்குமா என்ற பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ரொம்ப பிடிக்கும், நான் பொம்பளையா இருந்தா அவரை காதலித்திருப்பேன் என்றும் அவர் பொம்பளையா இருந்தா அப்பவும் காதலித்திருப்பேன் என்று கூறியுள்ளார். இதை பலர் கிண்டல் செய்யும் வண்ணம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Aiyoo Shanthanu neengala idhu
— Vignesh (@amarkalamvicky) September 25, 2022
Ivana vechu dhaan Vadivelu vishayathla content ready pana try panaanga ??? pic.twitter.com/GLQ0ywGukH