பீர் குடித்து விட்டு கெட்டவார்த்தை பேசுவார்! அஜித் உண்மையில் இப்படிபட்டவரா?

ajith valimai shalini marimuthu tamilcinema
By Edward Feb 27, 2022 06:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகை அஜித்குமார். தற்போது வரை வலிமை படத்திற்காக பிரமோஷன் செய்யாமல் இருப்பது எந்த பேட்டியும் கொடுக்காமல் இருப்பது என்று பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அப்படியிருந்தும் பலரால் புகழப்பட்டு வருபவர், அஜித்குமார்.

அந்தவகையில் சமீபத்தில் அவருடைய நெருங்கிய நண்பராக இருக்கும் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அஜித் பற்றி சுவாரஷ்யமாக பேசியிருக்கிறார். ஆரம்பகாலத்தில் ஆசை படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அஜித் பீர் அடித்துக்கொண்டே கெட்ட வார்த்தைகள் அதிகமாக பேசுவார்.

அது நண்பர்களுக்குள் இடையே செல்லமாக கூறும் வார்த்தைகள் தான். சூட்டிங்கின் போது எங்களுக்கு பீர் வாங்கி கொடுப்பார். படப்பிடிப்பு முடிந்தது எங்களுடன் சேர்ந்து பீர் அருந்துவார். தனக்கு நிறைய உதவிகளை செய்தது போல் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வது என அவருடைய நல்ல குணமாக இருக்கும்.

திருமணத்திற்கு பின் தான் அஜித் வேறொரு ஆளாக மாறிவிட்டார். அனைவருக்குமே இது வரவேண்டியது தான். அதன்பின் தான் குடும்பத்தை பார்த்து செட்டிலாகிவிட்டார் என்று கூறியுள்ளார். வெளியில் எப்போதாவது பார்த்தால் மட்டுமே இப்போது பேசுவார். அவருடன் நடிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.