கடைசி வரை மயில்சாமியின் ஆசை நிறைவேறாமல் போனது .. இறப்பதற்கு முன்பு வெளிவந்த வீடியோ

Mayilsamy
By Dhiviyarajan Feb 19, 2023 10:30 AM GMT
Report

பல படங்களில் காமெடியான நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் நடிகர் மயில்சாமி. நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மயில்சாமி ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். இவருடன் பிரபல இசை கலைஞர் drums சிவமணியும் கலந்துள்ளார்.

கோவிலில் இருந்து 3.30 மணிக்கு வீடு திரும்பிய மயில்சாமி, சில மணி நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக சென்னையில் உள்ள ராமச்சந்திர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்,  அவர்கொண்டு வந்த வழியிலேயே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

மயில்சாமியின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கடைசி வரை மயில்சாமியின் ஆசை நிறைவேறாமல் போனது .. இறப்பதற்கு முன்பு வெளிவந்த வீடியோ | Actor Mayilsamy Last Wish

கடைசி ஆசை

மயில்சாமி இறப்பதற்கு முன்பு drums சிவமணியிடம், "ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நடிகர் விவேக்கை அழைத்து வந்தேன். மேலும் பல பிரபலங்களை அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய ரொம்ப நாள் ஆசை இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்து வருவது தான்" என்று கூறியுள்ளார்.

ஆனால் கடைசி ஆசை நிறைவேறுவதற்கு முன்பே இறந்துவிட்டார். கடைசியாக மயில் சாமி கோவிலில் இருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.