எய்ட்ஸ்-ஆல் இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டு, அதை பண்ண சொன்னாங்க!! நடிகர் மைக் மோகன்..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் மைக் மோகன். பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மோகன் இடையில் காணாமல் போனார். அதன்பின் 2008 சுட்ட பழம் படத்தில் நடிக்க ஆரம்பித்து மீண்டும் சினிமாவில் இருந்து காணாமல் போனார். தற்போது பல ஆண்டுகள் கழித்து ஹரா என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது நடிகர் விஜய்யின் கோட் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் இருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு எய்ட்ஸ் நோய் இருந்ததாகவும் அதனால் மரணமடைந்துவிட்டதாக சில செய்திகள் வெளியானது பற்றி பகிர்ந்துள்ளார். நான் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதாக சொன்னது எனக்கும் என் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அப்படி இல்லை என்றதும் என்னிடம் பேட்டி கேட்க வந்தனர்.
எய்ட்ஸ் இல்லைனு சொல்லுங்க சார் என்று சொன்னது போங்காக இருந்தது. நீங்களே இருப்பீங்கன்னு சொல்லுவீங்க, நான் இல்லைன்னு சொல்லனுமா, நான் ஒன்னுமே சொல்லமாட்டேன் என்றேன். யாரோ ஒருவர் தப்பாக பேசினால், அதற்கு ரியாக்ஷன் கொடுக்கக்கூடாது, ஒன்னும் பண்ணாமல் இருந்தாலே போதும்.
நீங்கள் ஏன் மன உளைச்சலுக்கு போகனும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று போல்ட்டாக பேசியிருக்கிறார் நடிகர் மோகன். இப்படி பேசிய மோகன் வீடியோவை பார்த்து சிலர் அந்த வதந்தியை பரப்பியதே, நடிகை பூர்ணிமா என்றும் மோகனை அவர் காதலித்ததால் தான் அப்படி செய்ததாகவும் இணையத்தில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
எயிட்ஸ்ன்னு புரளி கிளப்புனதே நடிகை பூர்ணிமா தான் pic.twitter.com/s5ImoDA10i
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) June 16, 2024