70 கோடி ரூபாய் பட்ஜெட்..வசூல் வெறும் ரூ.7 கோடி தான்!! படுதோல்வியடைந்த ஸ்டார் நடிகர்..

Gossip Today Actors Indian Actress Bhagyashri Borse
By Edward Jan 08, 2026 06:30 AM GMT
Report

சினிமாத்துறையில் மூத்த நடிகர்கள் பலர், தன்னைவிட கிட்டத்தட்ட 20 வயது இளைய நடிகைகளுடன் ஜோடிப்போட்டு நடிப்பது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி தன்னைவிட 31 வயுஅது வித்தியாசமுள்ள 25 வயது இளம் நடிகையை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து பிளாப் படத்தை கொடுத்திருக்கிறார் 56 வயது நடிகர்.

70 கோடி ரூபாய் பட்ஜெட்..வசூல் வெறும் ரூ.7 கோடி தான்!! படுதோல்வியடைந்த ஸ்டார் நடிகர்.. | Actor Movie Made 70Cr Budget Box Office

வால்டர் வீரய்யா

தெலுங்கு திரைத்துறையில் மாஸ் மகாராஜா என்று புகழப்படும் நடிகர் ரவி தேஜாவுக்கு வால்டர் வீரய்யா படத்திற்கு பின் தோல்வி முகம் தான். 2023ல் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரய்யா படத்தில் நடித்தார் ரவி தேஜா. இப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இதன்பின் ராவணசுரா என்ற படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தது.

பின் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டைகர் நாகேஸ்வர ராவ் என்ற படத்தில் நடித்து வெறும் ரூ. 45 கோடி மட்டுமே வசூலித்தது தோல்வியை கண்டது. இப்படி ஹார்ட்ரிக் அடித்த ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மிஸ்டர் பச்சன் படம் வெளியானது.

70 கோடி ரூபாய் பட்ஜெட்..வசூல் வெறும் ரூ.7 கோடி தான்!! படுதோல்வியடைந்த ஸ்டார் நடிகர்.. | Actor Movie Made 70Cr Budget Box Office

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக 25 வயதான பாக்யஸ்ரீ நடித்தார். கிட்டத்தட்ட இருவருக்கும் 31 வயது வித்தியாசம் இருக்கும். ரூ. 70 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் ரூ. 7 கோடியை மட்டுமே வசூலித்து படுதோல்வியை கண்டது.

படம் தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும் அப்படத்தில் தன்னைவிட 31 வயது இளைய நடிகையிடம் படுநெருக்கமாக நடித்து முகம் சுளிக்கவும் வைத்தார் ரவி தேஜா. இப்படத்திற்கு முன் மாஸ் ஜதரா என்ற படம் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெளியானது.

70 கோடி ரூபாய் பட்ஜெட்..வசூல் வெறும் ரூ.7 கோடி தான்!! படுதோல்வியடைந்த ஸ்டார் நடிகர்.. | Actor Movie Made 70Cr Budget Box Office

ஆனால் படம் ரூ. 20 கோடி வசூலித்து தோல்வி அடைந்தது. தொடர்ந்து 5 பிளாப் மற்றும் படுமோசமான வசூலை கொடுத்தவர் மீண்டு வருவாரா என்று அடுத்த படத்தில் தான் தெரியும்.