Murasu cyclone: முதலமைச்சர் விஜய்யிடம் உதவி கேட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.. கோரிக்கையை ஏற்றாரா விஜய்?

Vijay N. Chandrababu Naidu
By Karthick Raja Nov 02, 2026 03:35 AM GMT
Report

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து இரண்டரை ஆண்டில் தமிழ்நாட்டில் முதலமைச்சராகிவிட்டார்.

விஜய் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு

கடந்த மாதம் ஆந்திரா சென்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மற்றும் சென்னை மாநகருக்கு கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. அதன்பின், சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார்.

Murasu cyclone: முதலமைச்சர் விஜய்யிடம் உதவி கேட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.. கோரிக்கையை ஏற்றாரா விஜய்? | Chandrababu Naidu Seeks Help From Cm Vijay

உதவி கேட்ட ஆந்திர CM சந்திரபாபு நாயுடு

வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், ஆந்திராவில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Murasu cyclone: முதலமைச்சர் விஜய்யிடம் உதவி கேட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.. கோரிக்கையை ஏற்றாரா விஜய்? | Chandrababu Naidu Seeks Help From Cm Vijay

இந்த நிலையில், புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழக அரசின் உதவி கோரி முதலமைச்சர் விஜயுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி மூலம் பேசியுள்ளாராம். ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், சீரமைப்பு பணிகளுக்காக ஆட்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Murasu cyclone: முதலமைச்சர் விஜய்யிடம் உதவி கேட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.. கோரிக்கையை ஏற்றாரா விஜய்? | Chandrababu Naidu Seeks Help From Cm Vijay

தனது கோரிக்கையை பரிசளிப்பதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கூறியதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.