குக் வித் கோமாளி ஷோல யாருக்கும் சமைக்க தெரியாது!! பங்கமாக கலாய்த்த நடிகர் நானி..
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. கடந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பிடித்தார்.
இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், மணிமேகலை - பிரியங்கா பிரச்சனை ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியது. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை வேறொரு தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது விரைவில் குக் வித் கோமாளில் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில், அதற்கான பிரமோ வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
கலாய்த்த நடிகர் நானி
இந்நிலையில், பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நானி, மே 1 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ள HIT 3 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் யூடியூபரும் குக் வித் கோமாளில் 5 பிரபலமுமான இர்பான் பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது, எனக்கு சமையலே தெரியாது, ஆனா குக் வித் கோமாளியில் நான் 3வது இடம் வந்தேன் என்று இர்பான் கூறியிருக்கிறார். அதற்கு நானி, அந்த ஷோல யாருக்கும் குக்கிங் தெரியாது. அதுல 3வது இடம்னா பெரிய விஷயம் என்று பங்கமாக கலாய்த்துள்ளார் நடிகர் நானி.
ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 5ல் பட பிரமோஷனுக்காக நானி மற்றும் பிரியங்கா மோகன் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஷோல யாருக்கும் Cooking தெரியாது. 😂😂🙊 pic.twitter.com/qG27gAB5Hj
— Sonia Vimal (@NameisSoni) April 29, 2025