அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர்!! நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் நெப்போலியன், கடந்த ஆண்டு தன் மகன் தனுஷ்க்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்தார்.

தனுஷ் அக்ஷயா திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில் நெப்போலியனுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்தின் மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாஃப்ட்வேர் கம்பெனியை நடத்தி வரும் நெப்போலியன் பெரும்பாலும் இந்தியர்கள் தான் வேலைக்கு வைத்திருக்கிறாராம். 2000 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்காவில் விவசாயம் செய்தும் காய்கறிகளை விளைவித்தும் வருகிறார்.

அவரின் மொத்த சொத்தின் மதிப்பு சுமார் 1000 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. டெஸ்லா, பென்ஸ் உள்ளிட்ட கார்கள் வைத்திருக்கும் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்திற்காக 20 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.