மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்த நடிகர் பாண்டியன்! மரணத்திற்கு இதுதான் காரணம்..

pandian tamilactor manvasanai
By Edward Dec 18, 2021 10:00 AM GMT
Report

சினிமாவில் பல நட்சத்திரங்கள் தவறான பாதையை எடுத்து வாழ்க்கையையே இழந்து காணாமல் போய்விடுவார்கள். அதிலும் நடிகர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகி மரணமடைவதையும் பார்த்திருக்கிறோம். அப்படி தமிழ் சினிமாவில் 1983ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் பாண்டியன்.

சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார் பாண்டியன். கடைசியாக புதுசு கண்ணா புதுசு என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே வருடமே உடல் நலக்குறைவால் மதுரையில் மரணமடைந்தார்.

மரணத்திற்கு என்ன காரணம் என்று பலர் கூறி வந்த நிலையில், நண்பர்களுடன் எப்போது விடாமல் அவர்களுக்காக வாழ்ந்தும் வந்தார். அப்போது மிதமிஞ்சிய மதுவுக்கு அடிமையாகினார்.

ஆனால் அப்படி இருந்த பாண்டியன் பணம் இல்லாத நேரத்தில் நண்பர்கள் கூட உதவி செய்யாமல் கை நழுவி விட்டார்களாம். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய பாண்டியனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு 2008ல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.