பிரபாஸ் திருமணம்? சினிமாத்துறையை சேர்ந்தவரா, இல்லையா.. பெரியம்மா உடைத்த ரகசியம்

Actors Marriage Prabhas
By Bhavya Aug 12, 2025 07:30 AM GMT
Report

பிரபாஸ்

பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.

தற்போது, 45 வயதை கடந்தும் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வருகிறார். சில நடிகைகளை பிரபாஸுடன் தொடர்பு படுத்தி செய்திகள் வெளியானது. இருப்பினும், அவை அனைத்தும் வெறும் செய்திகளாக கடந்து விட்டது.

பிரபாஸ் திருமணம்? சினிமாத்துறையை சேர்ந்தவரா, இல்லையா.. பெரியம்மா உடைத்த ரகசியம் | Actor Prabhas Marriage Details

திருமணம் எப்போது? 

இந்நிலையில், பிரபாஸ் பெரியம்மா சியாமளா தேவி அவரது திருமணம் குறித்து பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில், " இந்த ஆண்டே பிரபாஸுக்கு திருமணம் நடக்குமா என்று கேட்டால், அதை சொல்ல முடியாது. சிவன் எப்போது அருளுகிறாரோ, அப்போதுதான் திருமணம் நடக்கும். பெண் சினிமாத்துறையை சேர்ந்தவரா, இல்லையா என்பது இறைவனின் கையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.  

பிரபாஸ் திருமணம்? சினிமாத்துறையை சேர்ந்தவரா, இல்லையா.. பெரியம்மா உடைத்த ரகசியம் | Actor Prabhas Marriage Details