வீட்டில் மர்மமான முறையில் சடமாக கிடந்த நடிகை பிரதீப் கே விஜயன்.. அதிர்ச்சியில் திரையுலகம்..
தமிழில் 2013ல் நடிகர் மிர்ச்சி சிவா - வசுந்தரா நடிப்பில் வெளியான சொன்னா புரியாது என்ற படத்தின் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். உடல் பருமனோடு இருப்பதால பல படங்களில் காமெடி கலந்த குணச்சித்திர ரோலில் நடித்து வந்தார். தெகிடி, மீசைய முறுக்கு, என்னோடு விளையாடு, மேயாத மான், இரும்புத்திரை, ஹீரோ, மன உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கடைசியான ராகவா லாரன்ஸில் ருத்ரன் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி சப் டைட்டில் மற்றும் சில வேலைகளை செய்து வந்தார் பிரதீப். சென்னை பாலவாக்கத்தில் தனியாக ரூமில் வசித்து வந்துள்ளார்.
பிரதீப்பின் நண்பர்கள் அவருக்கு கால் செய்து முயற்சித்த போது அவர் போனை இரு நாட்களாக எடுக்காமல் இருந்துள்ளார். சந்தேகப்பட்ட நண்பர்கள் அவர் வீட்டுக்கு வந்து பார்த்ததில் உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் துர்நாற்றம் வருவது போல் தெரிந்ததால் காவல் துறைக்கு புகாரளித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் பிரதீப் கே விஜயன் இறந்தநிலையில் சடலமாக கிடந்துள்ளார். மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்றும் ஏதாவது பிரச்சனைக்காக மருந்துகள் உட்கொண்டாரா என்ற சந்தேகத்தின் பெயரில் போலிசார் விசாரித்து வருகிறார்கள்.