சிம்பு படத்தில் அப்படி செஞ்சது இப்பவும் கஷ்டமா இருக்கு!! நடிகை காதல் சந்தியா ஓபன்..
காதல் சந்தியா
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் தான் காதல். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சந்தியா நடித்து அறிமுகமாகினார். இப்படம் கொடுத்த ஆதரவால் அவரை காதல் சந்தியா என்று கூறி வந்தனர்.

இப்படத்தை தொடர்ந்து மலையாள மொழிகளிலும் நடித்து பிரபலமான சந்தியா, 2015ல் வெங்கட் சந்திரசேகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து செட்டிலாகினார். ஒரு பெண் குழந்தை பெற்ற சந்தியா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து வந்தார். தற்போது சின்னத்திரை சீரியலான மனசெல்லாம் என்ற தொடரில் நடித்திருந்தார்.
இப்பவும் கஷ்டமா இருக்கு
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், திரையுலக அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், காதல் படத்தில் நடித்தபோது எனக்கு 15 வயதுதான். பாலாஜி சக்திவேல் எனக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுத்து நடிக்க வைத்தார். பரத்தும் பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்.

படத்தின் கிளைமேக்ஸில் நான் நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த யூனிட்டுமே கைத்தட்டி பாராட்டினார்கள். அதுமட்டுமில்லாமல் படம் ரிலீஸுக்கு பின் ஷங்கர் மட்டுமில்லாமல் அவரது மனைவியும் வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். தமிழில் 2வதாக நடித்த டிஸ்யூம் படமும் எனக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக்கொடுத்தது.
அந்த படத்தை முடித்துவிட்டுதான் வல்லவன் படத்தில் கமிட்டாகினேன். அப்படத்தில் என்னிடம் சொன்னது மாதிரி என்னை பயன்படுத்தி இருக்கலாம். அப்படி பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கத்தான் செய்கிறது என்று சந்தியா தெரிவித்துள்ளார்.