ராசியில்லா நடிகையாக மாறி தேசிய விருது நடிகை! ஆறுதல் கூறி ரூட்டை போட்ட விவாகரத்தான நடிகர்

Gossip Today
By Edward May 30, 2022 03:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவையே ஒரு ரவுண்ட் சுற்றி வரும் வாரிசு நடிகை தற்போது என்ன செய்வது தெரியாமல் மேடையில் புலம்பும் அளவிற்கு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

வாரிசு தமிழ் நடிகருடன் இணைந்து நடித்த முதல் நல்ல வரவேற்பு பெறாமல் போக டிவி நடிகருடன் ஜோடி போட்டு மக்கள் மனதை ஈர்த்தார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உள்ள முக்கிய முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அப்படி சென்றிருக்கும் போது கடந்த 5 ஆண்டுகளில் அவர் நடித்த படம் ஒன்றிண்டை தவிர மற்ற படம் எல்லாம் பிளாப் தான். அப்படி இருந்த அம்மணி ஆரம்பத்தில் மெழுகு சிலையாகவும் பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் எடையை குறைத்து உடம்பையும் கெடுத்துக்கொண்டார். தற்போது எலும்பும் தோலுமாக இருக்கும் அம்மணி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே தேர்வு செய்ய இருக்கிறாராம்.

அதுவும் வேலைக்காகவில்லை என்று நடிப்பு முழுக்கு போடவும் தயாராகிவிட்டாராம். ஆனால் இதையறிந்த ஒல்லி நடிகர் அம்மணிக்கு கால் செய்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே அந்த நடிகை தான் தன் மனைவியிடம் இல்லாது பொல்லாதெல்லாம் சொல்லி கொடுத்து விவாகரத்து வரை இழுத்துவிட்டதாக கிசுகிசுக்கவும் செய்தனர். இதையெல்லாம் நடிகர் கண்டு கொள்ளாமல் ஓடிடி தளத்தில் வெளியான அம்மணியின் படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

பெரும்பாலும் வரும் படங்களில் எதாவதொரு ஸ்கிரிப்டில் அம்மணியை இழுத்துவிடுவார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க்பட்டு வருகிறதாம்.